மீண்டும் எம்.பி பதவி - ம.பி.யில் களமிறங்கிய மத்திய அமைச்சர் எல்.முருகன்

x

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்துள்ளார்...வரும் 27ம் தேதி நாடு முழுவதும் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுவார் என பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு எம்.பி பதவியில் அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் போபாலில், எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உற்சாக வரவேற்பு அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்