“கோயம்பேடு பேருந்து நிலையத்தை இப்படி மாற்றலாம்“ - சௌமியா அன்புமணி

x

சென்னையில் ஏரிகளில் குடியிருப்புகளை கட்டுவதாலேயே, வெள்ளம் ஏற்படுவதாக பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் அபாயங்கள் குறித்த கருத்தரங்கம் அண்ணாசாலையில் நடைபெற்றது. இதில், பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய பூங்கா அமைப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு, மன அழுத்த‌த்தை போக்கும் இடமாக மாற்ற முடியும் என்றார். ஏரிகளில் வீடுகளை கட்டுவதால், வெள்ளம், வறட்சி போன்றவற்றை சென்னை எதிர்கொள்வதாக சௌமியா அன்புமணி வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்