"இங்க பாருங்க.. இப்படி இருந்தா அந்த பழங்கள வாங்காதீங்க".. உயிருக்கே எமன்

x

மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் சென்னை கோயம்பேட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழம் உணவு பாதுகாப்புத் துறையால் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டு சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மாம்பழங்களும், ஸ்பிரே அடிக்கப்பட்ட 4 டன் வாழைப்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தவறு செய்யும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்