ரூ.1.5 கோடி கொள்ளை நாடகம்... திருடன் சொன்ன `திடுக்' தகவல்... வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி...

x

18 லட்சம் ரூபாய் கொள்ளை போன வழக்கில், ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறி புகாரளித்த பா.ஜ.க. நிர்வாகி மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் சொக்கம் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். பா.ஜ.க. நிர்வாகியான இவர், தனது வீட்டில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மற்றும் 9 சவரன் நகைகள் திருடப்பட்டதாக கூறி போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், கருத்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையரை கைது செய்தனர். விசாரணையில், அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் என்பதும், விஜயகுமார் வீட்டிற்குள் புகுந்து 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 9 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இருப்பினும், தன் வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் பணம் திருடுபோனதாக விஜயகுமார் புகாரளித்திருந்த நிலையில், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையரை விரைவாக பிடிக்க அழுத்தம் தரும் வகையில் பொய்யான தகவல் அளித்ததாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஜயகுமாரை எச்சரித்த போலீசார், அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்