NH-ல் விபத்து.. சிக்கிய மாணவர்.. பார்த்ததும் கனிமொழி MP செய்த செயல்

x

கோவையில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை, திமுக எம்.பி. கனிமொழி, காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவிநாசி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராபின் என்ற கல்லூரி மாணவர் ஒருவர், ராலியில் மோதி விபத்தில் சிக்கியிருந்தார். அந்த வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்த திமுக எம்.பி. கனிமொழி, மயங்கி கிடந்த கல்லூரி மாணவரை, கட்சியினரின் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், மருத்துவமனைக்கு சென்று மாணவரின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்