கிலோ கணக்கில் சிப்ஸ், அல்வா பறிமுதல் - ஐயப்ப பக்தர்களே உஷார்...!

x

குற்றாலத்தில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பப்பட சிப்ஸ், அல்வா ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் நீராடி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சில கடைகளில், தரம் குறைவான ரசாயன பொடிகள் பயன்படுத்தப்பட்ட மஸ்கோத் அல்வா தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில், அங்கு சென்று ஆய்வு செய்த போது, ரசாயன பொடிகள் பயன்படுத்தப்பட்ட மஸ்கோத் அல்வா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சுமார் 4 ஆயிரம் கிலோ அல்வா மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த சுமார் 2 ஆயிரம் கிலோ சிப்ஸ் ஆகியற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்....


Next Story

மேலும் செய்திகள்