கரூரில் தொடர்ந்து வந்த புகார்கள்...போலீஸின் அதிரடி ஆக்‌ஷனில் வியந்த மக்கள்

x

கரூரில், கடந்த 8 மாதங்களில், ஆன்லைன் மோசடி மற்றும் செல்போனை தொலைத்தவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த 7 பேருக்கு, ஒரு கோடியே 7 லட்சத்து 5 ஆயிரத்து 5 ரூபாய் மதிப்பிலான பணம் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான 123 செல்போன்களை காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஒப்படைத்தார். இனிவரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்