"குமரிக் கடலில் சூறாவளி.." - மொத்தமாக மாறும் வானிலை..

x

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்... உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்