கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அகற்றப்பட்ட ராமர் படத்துடன் கூடிய காவிக்கொடி

x

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், அனுமதியின்றி ஏற்றப்பட்ட ராமர் புகைப்படத்துடன் கூடிய காவிக் கொடி அகற்றப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்பணம் செய்யும் இடத்தில், கடந்த ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தன்று, ராமர் புகைப்படத்துடன் கூடிய காவிக் கொடியை இந்து அமைப்பினர் ஏற்றினர். அனுமதியின்றி ஏற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், வருவாய்த் துறையினர் அறிவுறுத்தலின்பேரில், ராமர் புகைப்படத்துடன் கூடிய காவிக் கொடி அகற்றப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் காவிக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்