"சிபிஐ விசாரணை ரத்து.." - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு | Chennai HC | CBI

x

ஆதி திராவிடர்களுக்கான வீட்டுமனை ஒதுக்கீட்டிற்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிப்பாணை பிறப்பிக்காதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காஞ்சிபுரம் காலூர் கிராமத்தில் நிலமற்ற ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை வழங்க தமிழக அரசு நிலம் கையகப்படுவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட அனுமதி வழங்கி 2001ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலம் கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதால், தங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி நில உரிமையாளர்கள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை செல்லத்தக்கது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்த தனி நீதிபதி, புதிய அறிவிப்பாணை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை புதிய அறிவிப்பாணை வெளியிடவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், அதிகாரிகள் நில உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாகக் கூறி, இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கடந்த 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதை வழக்கமான நடைமுறையாகக் கொள்ள முடியாது எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்குவது தொடர்பாக நிலம் கையகப்படுத்த மீண்டும் புதிதாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்