கலைஞர் ஆய்வு மையம்.. திறந்து வைக்கிறார் முதல்வர்

x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஆய்வு மையத்தை, இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், கலைஞர் ஆய்வு மையத்திற்காக புதிய தனி கட்டடம் கட்டப்பட்டுள்ளத. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. மாலை 5 மணி அளவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடயே திறப்பு விழா குறித்து எந்தவித அறிவிப்பு, சுற்றறிக்கை எதுவும் விடுக்கவில்லை என்றும், பேராசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்