#JUSTIN || தமிழக அரசு OLA UBER-க்கு வைத்த செக்

x

ஆட்டோக்களுக்கு தமிழ்நாடு அரசு , தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய செயலியை உருவாக்குவது குறித்து போக்குவரத்துத் துறை கூடுதல் ஆணையர் தலைமையில் சென்னை கிண்டியில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள் , ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.

ஓலா , ஊபர் போன்ற செயலிகளில் ஆட்டோக்களை இயக்குபவர்களுக்கு உரிய வருவாய் கிடைப்பதில்லை , எனவே தமிழக அரசே கேரள மாநிலத்தை பின்பற்றி புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அரசின் கண்காணிப்பில் தனியார் நிறுவனம் முலம் புதிய செயலியை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்