வெறும் 5 ரூபாய் போதும்.... சென்னையை சுற்றிப்பார்க்க.. மெட்ரோ அதிரடி ஆஃபர் | Metro

x

சென்னை மெட்ரோ ரயிலில், இன்று 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளான, டிசம்பர் 3ம் தேதி இந்த சலுகை அறிவிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக, இது தடைபட்டதால், அந்த சலுகையை இன்று பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப், பேடிஎம், போன்பே, க்யூஆர் கோட் ஆகியவற்றின் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்