"பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" - ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வைத்த கெடு

x

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் இணைப் பேராசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென, சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல் மற்றும் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர், அறிவிப்பு ஏதுமின்றி, விடுப்பு அளிக்காமல் விடுமுறையில் இருப்பதாகவும், இது பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்