மீண்டும் பூதாகரமாகும் வேங்கை வயல் விவகாரம் -பதறவிட்ட பிளக்ஸ்.. குவிந்த போலீசார்.. பற்றிய பரபரப்பு

x

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.. போலீசார் 31 நபர்களிடம் டிஎன்ஏ, ரத்த மாதிரி பரிசோதனை செய்தும் பரிசோதனை முடிவுகள் மலம் கலக்கப்பட்ட நீரின் முடிவுடன் ஒத்துப் போகவில்லை.. இதனால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. இதற்கிடையில் 10 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.. இதில் இறையூர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளியை கண்டுபிடிக்காமல் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரசு வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறையூர் கிராம பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பிளக்ஸ் பேனர் அடித்து இறையூர் மற்றும் வேங்கை வயல் பகுதியில் நள்ளிரவு வைத்துள்ளனர்.. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தற்போது காவல்துறையினர் பிளக்ஸ் போர்டை அகற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்