பேக் இன்ஸ்டா ஐடியை பார்த்து பணத்தை கொட்டிய பெண்கள்... கோவையில் நடந்த மெகா மோசடி

x

பேக் இன்ஸ்டா ஐடியை பார்த்து பணத்தை கொட்டிய பெண்கள்... கோவையில் நடந்த மெகா மோசடி

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மேக்கப் போட வாய்ப்பு தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண் அழகு கலை நிபுணர்களிடம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்த இளைஞரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் இருகூரை சேர்ந்தவர் கெளதம். பெயிண்டிங் வேலை செய்து வந்த இவர், இன்ஸ்டாகிராமில் பேக் ஐடி கிரியேட் செய்து, பெண் அழகு கலை நிபுணர்கள் மற்றும் பியூட்டி பார்லர் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பேசி வந்திருக்கிறார். கோவையில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மேக்கப் போட பெண் அழகு கலை நிபுணர்கள் தேவை எனவும் கூறி வலை விரித்த கெளதம், சிலரை மாடலாக நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்றிருக்கிறார். பின், ஏதேதோ காரணங்கள் கூறி நிகழ்ச்சிகள் தள்ளிப்போனதாக சுமார் 3 ஆண்டுகள் வரை கெளதம் இழுத்தடித்து வந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகாரளித்திருக்கின்றனர். விசாரணையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி என பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது அம்பலமானது. இந்நிலையில், கெளதமை கைது செய்திருக்கும் கோவை சைபர் கிரைம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்