அதிகரிக்கும் காற்று மாசு... மூச்சுவிடவே திணறும் திருவள்ளூர் மக்கள்

x

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 230-ஆக உள்ளதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக 100 முதல் 200 சதவீதம் வரை காற்று மாசு ஏற்படுவதாகவும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்