மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு | Mettur Dam

x

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 18 ஆயிரத்து 633 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு15 ஆயிரத்து 260 கனஅடி நீர் வீதம் வந்த நிலையில், தற்போது விநாடிக்கு 18 ஆயிரத்து 633 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணையின் நீர்மட்டம் 39.63 அடியாகவும், நீர் இருப்பு 11.90 டி.எம்.சி-யாகவும் உயர்ந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்