நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு... என்.எல்.சி. தகவல்

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன தலைவர் பிரசன்னகுமார் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, என்.எல்.சி. சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பழுப்பு நிலக்கரி உற்பத்தி 85 சதவீதமும், மின் உற்பத்தி 76 சதவீதமும் மட்டுமே எட்ட முடிந்தது.

நில பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் நடப்பு நிதியாண்டில் உரிய இலக்கை அடைய முடியும் என்றார்.

மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி 17 ஆயிரத்து 383 கோடி மொத்த வருமானமாக ஈட்டி உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 39 சதவீதம் அதிகம் எனவும், வரிக்கு பிந்தைய நிகர லாபம் ஆயிரத்து 426 கோடி எனவும், இது கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகம் என்றார்.

கடந்த ஆண்டு என்எல்சி நிறுவனம் தமிழக அரசுக்கு 429 கோடியும், மத்திய அரசுக்கு ஆயிரத்து 452 கோடியும் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்