மீண்டும் வந்த அதே ஆபத்து.. உடனடியாக மாஸ்க் கட்டாயம் - குமரியில் ஆரம்பித்த ஆட்டம்

x
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 9 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா தொற்று பாதிப்பால் 110 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் 63 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்