திருடிய நகைகளை வைக்காவிட்டால் கோழி குத்தி பரிகாரம் - பேனரில் வார்னிங் கொடுத்த உரிமையாளர்

x

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்த ராமசாமி, கடந்த 15-ம் தேதி வீட்டின் சாவியை மறைவாக வைத்து விட்டு வெளியூர் சென்றுள்ளார். வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த 18 பவுன் நகையும், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் காணாது கண்டு ராமசாமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பணம், நகை கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீட்டின் முன் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில், வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர்கள் யாராவது பணம், நகையை எடுத்திருந்தால் அதனை மீண்டும் வைக்கும்படியும், இல்லையென்றால் கோயிலில் கோழி குத்தி பரிகாரம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், பணம் நகை எடுத்தவரின் குடும்பமே கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்