சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் ஸ்பாட்டில் சம்பவம் செய்த ஆணையர் இனிமேல் மாடு வெளிய வந்தால்

x

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் அருகே, நடந்து சென்ற முதியவர் ஒருவரை மாடு முட்டி தூக்கியதும், முதியவர் படுகாயத்துடன் உயிர் தப்பியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கண்ட அவர், அதன் உரிமையாளர்களுக்கு சம்பவ இடத்திலே அபராதம் விதித்தார். மேலும், உரிமையாளர்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றித் திரிந்த சுமார் 30 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் சிறை பிடித்தனர். இதனிடையே, முதியவரை முட்டிய மாடு, அருகிலுள்ள கோயிலுக்கு சொந்தமான மாடு என்பது தெரியவர, அடையாளம் தெரியாத மாட்டின் உரிமையாளர் மீது ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து, சாலைகளில் கேட்பாரற்று கிடந்த மாடுகளின் உரிமையாளராக சுமார் 18 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அவர்களிடம் விளக்கம் கேட்டு சம்மனும் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்