கூட்டணியில் நீடிக்குமா விசிக? - Big சஸ்பென்ஸ்.. இன்று பதில்

x

திமுக கூட்டணியில் மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியகி உள்ளது.

vovt

திமுக கூட்டணியில் இங்கம் வகிக்கும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆனால், காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டு வரும் மதிமுகவுடன் உடன்பாடு எட்டப்பட்டு, இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், திமுக கூட்டணியில் இரண்டு தனித்தொகுதி ஒரு பொதுத் தொகுதி என 3 தொகுதிகளை கேட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்