"காரை பதம்பார்த்த உணவக ஓட்டுநர்" - பிரபல தனியார் உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி

x

மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவர், ஒஎம்ஆரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு தனது காரில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். ஹோட்டலின் நுழைவு வாயிலில் இருந்த பார்க்கிங் ஓட்டுனரிடம் காரை ஒப்படைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறிது நேரம் கழித்து அசோக்குமார் அழைத்த ஹோட்டல் காவலர், கார் சிறிய விபத்தில் சிக்கியதாக கூறி காண்பித்துள்ளார். ஆனால், புதிய ஓட்டுநர் காரை ஒட்டி ஜெனரேட்டரில் இடித்ததில், காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தும், உயிரை பாதுகாக்கும் AIR BALLOON வெடித்து கிடந்துள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில் அலைகழிப்பதாக கூறபடுகிறது. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான அசோக்குமார், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், காரை சரிசெய்து ஒப்படைக்கும் படி கூறியுள்ளனர். ஆனால், தற்போது வரை காரை சரிசெய்யும் முயற்சியில் ஈடுப்படவில்லை என அசோக் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்