கோவையை புரட்டிப்போட்ட கனமழை.. மழைநீரில் மூழ்கிய சுரங்கபாதைகள்.. பிரத்யேக கழுகு பார்வை காட்சி

x

கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் நீர் தேங்கியுள்ளது - மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநகர பகுதிகளின் கழுகு பார்வை காட்சிகள் அனுப்பட்டுள்ளது

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்தது. முக்கிய சாலைகள், Pநீரில் மூழ்கியது. இந்த நிலையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் கோவை கவுன்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை வளாகத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பேருந்தை வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததால்,மோட்டார்கள் மூலம் பேருந்து பணிமனையில் சூழ்ந்த வெள்ள நீரை அகற்றி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்