அரசு நிலத்தில் கொட்டகை..அடாவடியில் பெண்கள்... தட்டிகேட்ட காவல்துறையிடனரிடம் தள்ளுமுள்ளு....

x
  • கம்பி கேட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டு காவல் ஆய்வாளரிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் இந்த மஞ்ச டீ-சர்ட்தான், அரசாங்க நிலத்தை ஆட்டையை போட கூட்டம் கூட்டிய பலே கிள்ளாடி...
  • தலைவி ஒருபுறம் கொக்கரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் அள்ளக்கைகளோ தீவைத்து கொளுத்தினாலும் பரவாயில்லை....என குடிசைக்குள் ஓடி நுழைந்து களேபரம் செய்தனர்.
  • தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பெண்களை ஓரம் தள்ளிவிட்டு அனைத்து கொட்டகைகளையும் அரசு அதிகாரிகள் பிரித்து வீசி எரிந்தனர்.
  • பார்ப்பதற்கு அப்பாவி மக்களை அரசு அதிகாரிகள் கொடுமைப்படுத்தி, அவர்களின் குடிசைகளை பிரித்து, நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக தோன்றலாம்.
  • ஆனால் அது உண்மை அல்ல.... இவைகள் அனைத்தும் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போடப்பட்ட தீடீர் கொட்டகைகள்.
  • ஆம்...இங்கிருப்பவர்கள் அனைவரும் பஸ்ஸில் துண்டு போட்டு இடத்தை பிடிப்பதை போல காலியாக இருந்த அரசாங்க நிலத்தில் கொட்டகை போட்டு பட்டா போட முயற்சித்துள்ளனர்.
  • கலவரக்காடாக காட்சியளிக்கும் இந்த இடம் கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறையில் உள்ள அரசு புறம் போக்கு நிலம்.
  • பல காலமாக கேட்பாரற்று கிடந்த இந்த நிலத்தில், திடீரென கொட்டகை போடப்பட்டுள்ளதாக அகஸ்தீஷ்வரம் தாசில்தாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
  • உடனே போலீசார் மற்றும் வருவாய் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறது அரசு இயந்திரம். அங்கே யாரும் எதிர்பாராத வண்ணம் 21 திடீர் குடிசைகள் இருந்தன.
  • 4 கழிகளில் ஒரு தூண், தென்னங்கீற்றில் தடுப்பு, கூரையாக இரும்பு ஷீட் என ஒன்றுக்கொன்று சலைக்காமல் மொத்தம் 21 கொட்டைகள் போடப்பட்டிருந்தன.
  • இதனை கண்ட அதிகாரிகள் அந்த கொட்டகளை பிரித்து எரிய சென்ற போது , உள்ளே சிலர் கட்டிலை போட்டு படித்து உறங்கி கொண்டிருந்தனர்.
  • யார் நீங்கள்...? எதற்காக இங்கே கொட்டகை போட்டு குடியேறி இருக்கின்றீர்கள் என்ற அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர்கள் கூறிய பதில்கள் அனைவரையும் அதிசயிக்க வைத்தன.
  • ஆம்.... பல ஆண்டுகளாக அதே பகுதியில் வாடகை குடித்தனம் நடத்தி வந்தவர்கள் தான் இந்த திடீர் குடிசையின் சொந்தகாரர்கள்.
  • பல ஆண்டுகளாக காலியாக கிடந்ததால், இந்த இடத்தை யாரும் பொருட்படுத்தவில்லை.அப்பகுதி மக்கள் சிலர், எப்படியாவது இந்த இடத்தை ஆக்கிரமித்து பட்டா வாங்கி விட வேண்டும் என திட்டம் தீட்டி வந்திருக்கிறார்கள்.
  • இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த இடத்தில் அரசாங்க வேலை தொடங்குவதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
  • இதனை கண்ட மக்கள் இத்தனை நாட்களாக காத்திருந்தது வீணாகி விடக்கூடாதென கொட்டகை போட்டு இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
  • அங்கே இருந்தவர்கள் அனைவரையும் கொட்டகையை பிரித்து கொண்டு இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
  • ஆனால் மக்கள் அதிகாரிகளின் வார்த்தைகளை மதிக்காமல் வாக்குவாதத்தில் இறங்கி இருக்கிறார்கள்.அதில் ஹைலைட் இந்த மஞ்சள் டீ-சர்ட் தான். புரம்போக்கு இடத்திற்கு பட்டா இருக்கிறதா யாரை கேட்டு உள்ளே நுழைந்தாய் என போலீசாரையே மிரட்டி இருக்கிறார்.
  • கரகரவென கத்தியவரை தள்ளிவிட்ட காவல்துறையினர் அங்கிருந்த கொட்டகளை ஒவ்வொன்றாய் அடியோடு பிடிங்கி போட்டிருக்கிறார்கள்.
  • அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண் என்ன நடந்தாலும் வரப்போவதில்லை என சொல்லி கொட்டகைக்குள் அமர்ந்து தர்க்கம் செய்துள்ளார்.
  • அதற்கு அருகிலேயே பிரித்து கொண்டிருந்த ஒரு கொட்டகையில் பெண்கள் பலரும் புகுந்து வெளிவர மறுத்து விதண்டாவாதம் செய்தனர்.
  • அனைவரையும் இழுத்து வெளியே தள்ளிய அதிகாரிகள் கொட்டகைகளை பிரித்து வீசி விட்டு, இது அரசாங்க சொத்து ஆக்கிரமித்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
  • மேலும் அங்கிருந்தவர்களின் நலன் கருதி விரைவில் உங்களுக்கான மாற்றிடம் கிடைக்க வழிவகை செய்வதாகவும் கூறி விட்டு சென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்