ஜி 20 மாநாடு - குடியரசு தலைவர் விருந்து - டெல்லி விரையும் முதல்வர்

x

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் தலைவர்கள், இந்தியாவின் முக்கிய தலைவர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சனிக்கிழமை விருந்தளிக்கிறார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இந்த பயணத்தின்போது, அவர் இந்தியா கூட்டணியின் தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்