கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு - மேடான பகுதியை தேடி சென்ற மான்

x

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு - மேடான பகுதியை தேடி சென்ற மான்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு மற்றும் வனப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதில், வெள்ளத்தில் சிக்கிய மான் ஒன்று மேடான பகுதிக்கு செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்