பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.. நீரில் மூழ்கிய தரைப்பாலம்.. ஆபத்தாக கடக்கும் வாகன ஓட்டிகள்

x

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.. நீரில் மூழ்கிய தரைப்பாலம்.. ஆபத்தாக கடக்கும் வாகன ஓட்டிகள்

தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது.

இதனால் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் சிலர் வாகனம் ஓட்டிச்செல்லும் நிலையில், சிலர் தண்ணீரில் நின்றபடி செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்