3 நாட்களில்... பட்டாசு கழிவுகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

x

சென்னையில் மூன்று நாளில் 210 டன் பட்டாசு கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகை அன்று சேகரிக்கப்படும் குப்பை, அபாயகரமான கழிவுகள், தனியாக சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 15 மண்டலங்களில் 11 ஆம் தேதி 3.67 டன் பட்டாசு கழிவுகளும், 12 ஆம் தேதி 53.79 டன், 13 ஆம் தேதி 152.28 டன் என மூன்று நாட்களில் 210 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த குப்பைகள், கும்மிடிப்பூண்டியில் உள்ள கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்கு நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் முதற்கட்டமாக 54 டன் கிலோ கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்