"சிறையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள்" - பட்டிமன்றம் புகழ் ஞானசம்பந்தன் நெகிழ்ச்சி

x

மதுரை ம‌த்திய சிறையில் இருந்து, கைதிகளுக்காக நூலகம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளதாக, பட்டிமன்றம் புகழ் ஞானசம்பந்தன், நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மத்திய சிறையில், கைதிகளின் மன அழுத்த‌த்தை போக்கும் வகையில் நகைச்சுவை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவர் ஞானசம்பந்தன் பங்கேற்று, அறநெறி கருத்துக்களை, எளிய முறையில் எடுத்து கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நூலகம், உணவகம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை சிறை கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்