ஆன்லைனில் பார்ட் டைம் வேலை - மக்களே உஷார்..!

x

ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர், இணையதளம் வாயிலாக வேலை தேடி வந்துள்ளார். இதனை அறிந்த இளைஞர் ஒருவர், அவருக்கு டெலிகிராம் மூலம் செய்தி அனுப்பிய நிலையில், தனியார் உணவகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ரேட்டிங்க் கொடுக்கும் வேலை இருப்பதாகவும், முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் தருவதாகவும் கூறி வலை விரித்துள்ளார். முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து வந்த அப்பெண், ஒரு கட்டத்தில் 22 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த ஈரோடு சைபர் கிரைம் போலீசார், பணப்பரிவர்த்தனை நடைபெற்ற வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் செல்போன் சிக்னலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மாண்டா சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சிவக்குமார், ஆன்லைன் வேலைவாய்ப்பு பெயரில் பல லட்ச ரூபாய் வரை தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது இந்தியா முழுவதும் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து மோசடி பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் போலீசார், சிவக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்