கொடநாடு வழக்கு விவகாரம் - ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டதாக கூறி, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என ஈபிஎஸ் கூறியதை, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஏற்றார். இதை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் ஈபிஎஸ் ஆஜராகி சாட்சியம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் ஈபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்