தீவிர வேட்டையில் தேர்தல் பறக்கும் படை.. சிக்கும் கோடிகள்.. பரபரப்பு

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.....

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை சோதனை சாவடியில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 23 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்

இதே போல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஏடிஎம் மையத்துக்கு நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட 16 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள 185 சேலைகள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்