வருமான வரி கட்டுவதால் சிறையில் ஃபர்ஸ்ட் கிளாஸ் அறை கேட்ட ED அதிகாரி.. நீதிபதி சொன்னது என்ன?

x

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை அமலாக்கதுறை அதிகாரி அங்கிட் திவாரிக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கி தரவேண்டும் என்று, திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவரிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி சார்பில், சிறையில் முதல் வகுப்பு கேட்டு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது,

இது முக்கியமான வழக்கு என்பதால், முதல் வகுப்பு கொடுக்க கூடாது என லஞ்ச ஒழிப்பு போலீல் தரப்பும்,

அமலாக்கத்துறை அதிகாரி ஒரு முதுகலை பட்டதாரி, வருமான வரி கட்டி வருகிறார் என்பதால், தகுதியின் அடிப்படையில்முதல் வகுப்பு வழங்க வேண்டும் என அங்கிட் திவாரி சார்பிலும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மோகனா, அமலாக்க துறை அதிகாரிக்கு சிறைசலையில் முதல் வகுப்பு ஒதுக்கி தர என்று சிறைதுறைக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்