பிரேமலதா தம்பி சுதீஷின் மனைவி அதிர்ச்சி புகார் - "இப்படியும் நடந்துச்சா?"

x

தே.மு.தி.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் 43 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்...

'லோகா பில்டர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சந்தோஷ் சர்மா என்பவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதில் 78 வீடுகளை வாங்க சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி பல கோடி கொடுத்து ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஒப்பந்தப்படி வீடுகளை ஒதுக்காமல், 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று 43 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக பூர்ணஜோதி தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் கட்டுமான உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது உதவியாளர் சாகர் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்