அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திடீர் விடுமுறை... கேமராவை கண்டதும் ஆசிரியர் செய்த செயல்

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை அரசுப்பள்ளி மாணவர்கள், பகலில் பேருந்து நிறுத்தத்தில் நின்றதாக கூறப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் திடீரென விடுமுறை அளித்து விட்டதாகவும், பேருந்து வர நேரம் இருப்பதால் சாலையில் காத்திருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் சாலையில் நின்ற காட்சிகளை கேமராவில் பதிவு செய்வதை அறிந்த ஆசிரியர், மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆசிரியரிடம் கேட்டதற்கு, பூம்பாறை கிராமத்தில் திருவிழா நடப்பதால் விடுமுறை அளித்ததாக தெரிவித்துள்ளார். இதுபோன்று பள்ளிக்கான விடுமுறை அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களும், பெற்றோர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்