ஹோட்டலில் சாப்பிடாமல் சென்றது குத்தமா..? சுற்றுலா வந்தவர்களை கதறவிட்ட ஊழியர்கள்

x
  • ஹோட்டலில் சாப்பிடாமல் சென்றது குத்தமா..? சுற்றுலா வந்தவர்களை கதறவிட்ட ஊழியர்கள் - மதுரையில் நடு ரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
  • உணவகத்தில் சாப்பிடாமல் சென்ற சுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டிபிடித்து கண்ணாடியை நொறுக்கிய 4 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
  • சிதம்பரத்தை சேர்ந்த 20 பேர் குற்றாலம் சென்று திரும்பியபோது மதுரை மாங்குளம் சந்திப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட அமர்ந்துள்ளனர்.
  • அப்போது சாம்பார், சட்னி உள்ளிட்டவை தீர்ந்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எதுவும் சாப்பிடாமல் வெளியேறியுள்ளனர்.இதனால் ஆத்திரம் அடைந்த உணவக ஊழியர்கள் மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வேனை மறித்து கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.
  • இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விக்ரம், சமரஜித், அரவிந்த், ராஜேஷ்கண்ணா ஆகியோரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்