தனுஷ்கோடி, கன்னியாகுமரி, கேரளா ஒரே நேரத்தில் கதிகலங்கவிட்ட கடல்.. சுனாமி போல அலை.. பீதியில் மக்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் திடீரென கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 20 அடி உயரம் வரை கடல் அலைகள் மேல் எழுந்ததாக கூறப்படும் நிலையில், அலையில் அடித்து வரப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், கடல் சீற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால், மீனவ கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவளம், மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை, தேங்காய்பட்டணம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. எனவே, சுற்றுலா படகு சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து கடலோர காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்