சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - கெத்தாக வேட்டி சட்டையில் என்ட்ரி கொடுத்த டி.ஜி.பி சங்கர் ஜிவால்

x

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் பாரம்பரிய உடையில் வருகை தந்து புதுப்பானையில் காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்... ஆவடி காவல் ஆணையர் சங்கரும் தனது குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொண்டார்... முன்னதாக டி.ஜி.பி சங்கர் ஜிவாலுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்... தொடர்ந்து கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பறை இசை என விழா களைகட்டியது.


Next Story

மேலும் செய்திகள்