#BREAKING || குன்னூர் கோர விபத்து - 8 பேர் பலி

x

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு. தென்காசி கடையம் பகுதியை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு. காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பேருந்து விபத்தில் சிக்கியது. குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்