தமிழ்நாடு அரசின் விழா ஆந்திராவில் நடத்தப்பட்டதால் சர்ச்சை

x

திருத்தணி அருகே, தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவை, ஆந்திராவில் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களை சேர்ந்த 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் பலிஜகண்டிகையில் உள்ள திருமண மண்டபத்தில் விழா நடத்தப்பட்டது. திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று 300 சீர்வரிசையை வழங்கி வாழ்த்தினார். திருத்தணி தொகுதியில் பல்வேறு திருமண மண்டங்கள் இருந்தபோதும் அங்கு நிகழ்ச்சியை நடத்தாமல், ஆந்திராவில் உள்ள திருமண மண்டபத்தை தேர்வு செய்து நடத்தியதால், கர்ப்பிணிகள் வெகு தூரம் பயணித்து அவதிப்பட்டனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்