கார்த்தி சிதம்பரம் வழக்கு - நீதி கேட்டதும் டெல்லி நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான விசா முறைகேடு வழக்கு விசாரணையை, மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணை மே 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்