மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு - சிக்கிய தனியார் ஊழியர்கள் - ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு

x

திருவள்ளூர் ஆட்சியர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் இடத்தை ஆய்வு செய்து, முறைகேடு நடந்திருப்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

திருத்தணியில் அரசுத் திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்... திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டார்... உள்வளாகத்தில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு பல வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்த நிலையில், பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன... ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் உதவியாளர்கள் யாரும் தங்கி இருப்பதற்கான அடையாளமே இல்லாத நிலையில், வருகைப் பதிவேட்டில் போலியான விவரங்கள் கொடுக்கப் பட்டிருப்பதைக் கண்டறிந்து தனியார் நிறுவன ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்தார்... அத்துடன், இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்