கலெக்டர் மீது பாய்ந்த வழக்கு.. ஐ கோர்ட்டில் தமிழக அரசு பதில்

x

தொடுக்காடு பஞ்சாயத்து பகுதியில் உள்ள 26 பெரிய நிறுவனங்களிடமிருந்து, சொத்து வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. 5 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களிடம் நிலுவை தொகையை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை செயல்படுத்தாத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரி மற்றும் அபராத தொகை ஒரு லட்சம் ரூபாயை, 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவகாசம் வழங்கியுள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து, மார்ச் 25-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்