நோயாளிகளிடம் நூதன முறையில் மோசடி? - கதைகளைக் கூறி கடன் பெற்ற மருத்துவர்

x

கோவையில், மருத்துவர் ஒருவர்.. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் தன் சோகக் கதைகளை கூறி சுமார் ஒன்றரை கோடி வரையிலான பணத்தை கடன் பெற்று தலைமறைவானதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சித்தையா. மருத்துவரான இவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இருதயத்துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், தன் மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்ப முடியாமல் திண்டாடி வருவதாகவும் கூறி தன்னிடம் வரும் நோயாளிகளிடம் பணம் கேட்டு சித்தையா வலை விரித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அவரது க்ளினிக்கில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் பெண் உட்பட நோயாளிகள் வரை லட்சக் கணக்கிலான பணம் கடன் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தன் கிளினீக்கிற்கு வரும் மருத்துவ பிரதிநிதிகளிடமும் சித்தையா கடன் பெற்றதாக கூறப்படும் நிலையில், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் சித்தையா தலைமறைவானதாக கூறி பணம் கொடுத்த அனைவரும் போலீசில் புகாரளித்துள்ளனர். மேலும், இந்த மோசடி பணத்தில் தன் கிளினீக்கில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவருக்கும், தன் குழந்தைகளுக்கும் சித்தையா வெளிநாட்டில் வீடு கட்டி கொடுத்திருப்பதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்