கோவை பாஜக பிரமுகரின் கணவர் மீது பெண் பரபரப்பு புகார் - வெளியான சிசிடிவி

x

கோவையில், வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதோடு, ஆட்களை வைத்து மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க. பிரமுகரின் கணவர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது... கோவை மாவட்டம் கெம்மாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவருக்கும், மகேந்திர குமார் என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மகேந்திரகுமார் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகசுந்தரத்தின் வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருட்களை இரண்டு லாரிகளில் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஒரு லாரி பொருட்களை மட்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள பொருட்களை திருப்பி தராமல் மிரட்டல் விடுப்பதாக சண்முகசுந்தரமின் மனைவி கவுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனிடையே, அந்த கும்பல் சிசிடிவி கேமிராவை உடைக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்