5,578 ஊராட்சிகளுக்கு ரூ.294.83 கோடி மதிப்பில் வரப்போகும் திட்டம் - முதல்வர் ஆணை

x

உயிர் நீர் இயக்கத்தின் கீழ், 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் ஆயிரத்து 674 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், நாள் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க, ஆயிரத்து 674 புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் அமைக்க, 294 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் நிர்வாக அனுமதி வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 125 லட்சம் வீடுகளில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 99 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 5 ஆயிரத்து 578 கிராம ஊராட்சிகளுக்கு 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மக்கள் நிதிப் பங்களிப்புடன் 294 கோடியே 83 லட்சம் மதிப்பில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ், புதிய மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்