தமிழ் மரபுப்படி "நடுகல்".. தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நிதியுதவி..!

x

இரண்டாம் உலகப்போரின்போது, தாய்லாந்து - பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி "நடுகல்" அமைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இதையடுத்து தாய்லாந்து நாட்டிலிருந்து வருகை புரிந்த தாய்லாந்து தமிழ்ச் சங்கத் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத் தலைவர் ரமணன், உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, "நடுகல்" அமைத்திட வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தனர். மேலும், தாய்லாந்து காஞ்சனபுரியில் நடைபெறவிருக்கும் "நடுகல்" திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறும் முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்