முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி

x

ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை என முதல்வர் புகழாரம் சூட்டினார்... இதில் பலருக்கு சிலைகள் நிறுவி மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நின்று நிலவச் செய்துள்ளது திமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்... மேலும் 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், உபதேசியார் நல வாரியம், சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, கரூர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு, ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள் என திராவிட மாடல் அரசின் சார்பில் கிறிஸ்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்... கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப் பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்